tamilnadu

கைத்தறி சங்கங்களுக்கு 8 ஆண்டுகளில் ரூ.450 கோடி தள்ளுபடி மானியம் தராததால் நெசவுத் தொழில் நெருக்கடி

திருப்பூர், மே 9 –தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டியதள்ளுபடி மானியத்தொகை 2011-ம் ஆண்டு முதல் 2018-ஆண்டு வரை சுமார் ரூ.450 கோடியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் அனைத்து கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் மூடும் ஒரு அபாயநிலையை அரசு உருவாக்கி உள்ளது என்று தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் சங்கம் கூறியுள்ளது.இந்த சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தள்ளுபடி மானியம் நிலுவைஇருப்பதால் நெருக்கடி ஏற்பட்டு கூட்டுறவு சங்கங்களைமூடிவிடும் நிலை உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் எதுவும் கிடைக்காதஒரு நிலை ஏற்படும். அரசு கூட்டுறவு சங்கங்களை கடந்த சில ஆண்டுகளாகஒழுங்காக நடத்தாததால், தொழிலாளர்கள் சரியாகவேலை கிடைக்காமல் தனியார் உற்பத்தியாளர்கள்வழங்குகிற சொற்ப கூலிக்கு வேலை செய்ய வேண்டியசூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே கைத்தறி நெசவுத் தொழிலாளர் தங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காக பெற்ற வங்கிக்கடன் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கர்நாடக அரசு ஆண்டுக்கு 25,000-ம் காங்கிரீட் வீடுகளைகைத்தறி நெசவாளர்களுக்கு இலவசமாக கட்டிக்கொடுத்துவருகிறது. அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்துகைத்தறிநெசவாளர்களுக்கும், அரசு இலவசமாக வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். இதற்காக அனைத்துப் பகுதிகளிலும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம்நிலங்களை கையகப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி, அதில் இலவசமாக காங்கிரீட் வீடுகளைவீடில்லாத அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.