அவிநாசி, டிச. 8- அவிநாசி அருகே ஞாயிறன்று நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். அவிநாசி ஒன்றியம், நடுவர்சே ரியில் தனியார் திருமண மண்ட பத்தில் நவீன் பிரபு, பானுப்பிரியா திருமணம் நடைபெற்றது. இதில் தமிழர் பாரம்பரியங்கள் மாறாமல் அனைத்து மக்களுக்கும் நினைவூட் டும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. திருமண விழாவில் ஒரு நிகழ்வு மணமகன், மணமகள் இல்ல அழைப்பு. இதற் காக நான்கு கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செய்த னர். மேலும் இரண்டு கிலோமீட் டர் தூரம் மணமகன் மாட்டு வண் டியை ஓட்டிச் சென்றார். இக்காட்சி யைப் பார்த்த குழந்தைகள் முதல் அனைவரும் வியப்பாக பார்த்த னர். மாட்டு வண்டி பயண ஏற்பாடு களை களஞ்சியம் விவசாய சங் கத்தினர் செய்திருந்தனர். இத்திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் நடு வச்சேரி ஊராட்சிக்குட்பட்ட கருக் கண்காட்டுப்புத்தூர் பள்ளியின் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கல்வி அமைச்சர் அப்பள்ளியினை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.