tamilnadu

img

தனியார் பள்ளியால் போக்குவரத்து நெரிசல் சீரமைக்க சிபிஎம் வலியுறுத்தல்

அவிநாசி, அக். 4- போக்குவரத்து நெரிசலை சீர மைக்க நடவடிக்கை மேற்கொள்ளும் படி கிராம நிர்வாக அலுவலருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. அவிநாசி அருகே  பூண்டி பேரூராட் சிக்குட்பட்ட 9 வது வார்டு பகுதி யில் ராமகிருஷ்ணா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு  குழந்தை களை அழைத்து  வரும் பெற்றோர்கள்  இரண்டு சக்கர வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில்  சாலை யில் நிறுத்தி செல்வதினால் கடுமை யாகப் போக்குவரத்து நெரிசல் ஏற் படுகின்றது. இதனை உடனடியாக சீரமைக்க வலிறுத்தி பேரூராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது. அதில் பள்ளி நிர்வாகத் துடன் பேசி போக்குவரத்து நெரிசலை தவிர்த்து வாகனங்களை வேறு இடத் தில் நிறுத்த வழி வகை செய்ய வேண் டும் என கூறப்பட்டுள்ளது.