tamilnadu

திருப்பூர்; வழிப்பறி கொள்ளையர்கள் கைது

திருப்பூர், செப். 26- திருப்பூர் அருகே செல்போன் வழிப்பறியில் ஈடு பட்ட மூன்று கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.     திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ் வரன் (27). இவர் அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இதன்பின் வழிப் பறி செய்த செல்போனை விற்க முயன்றபோது, காவல் துறையினர் அவர்களை பிடித்தனர்.

 இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணை யில், திருப்பூர், சாமுண்டிபுரம், சங்கம் நகரைச் சேர்ந்த அஜித் குமார் (22), சாமுண்டிபுரம், நேருஜி நகரைச் சேர்ந்த நரேந்திரன் (21), பெருமாநல்லூர் தட்டாங் குட்டை சிவசக்தி நகரைச் சேர்ந்த ஜீவா (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.