tamilnadu

திருப்பூர் பேக்கரி, மளிகை கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல்

திருப்பூர், பிப். 16- திருப்பூரில் உள்ள பேக்கரி, மளிகை கடை உள்ளிட்ட இடங்களில் உணவு பாது காப்புத் துறையினர் ஞாயிறன்று சோதனை நடத்தி காலாவதியான உணவுப் பொருட் களை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், பல்லடம், சின்னக்கரை பகுதிக ளில் உள்ள மளிகை கடைகள், பேக்கரிகள், பெட்டிக் கடைகளில் மாவட்ட உணவு பாது காப்பு பிரிவு நியமன அலுவலர் விஜயலலி தாம்பிகை தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக்கடை உரிமையாளர்கள் இருவருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்த மளிகை கடை உரிமையாளர் ஒருவருக்கு சம்பவ இடத்தில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் தேதி குறிப்பி டப்படாத திண்பண்டங்கள் 2 கிலோ, காலா வதியான குளிர்பானங்கள் 8 லிட்டர், கெட்டுப் போன காய்கறிகள் 3 கிலோ பறி முதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தூய்மையான முறையில் பராமரிப்பு செய் யாத பேக்கரிக்கு குறைகளை சரி செய்ய 4 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது 3 ஓட்டல்களுக்கு  பதிவு சான்று மற்றும் உரிமம் பெற நோட் டீஸ் அளிக்கப்பட்டது. இதுபோல், தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் வைத்திருக்கும் வணிகர்கள் மீது தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும். மாவட்டம் முழு வதும் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் என்று நியமன அலுவலர் விஜய லலி தாம்பிகை கூறி இருக்கிறார்.