tamilnadu

மனநலம் பாதித்தவர் தற்கொலை

திருப்பூர், ஏப்.14- திருப்பூர் டி.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவருக்கு குழந்தை இல்லாததால், பெரியசாமி என்பவரை தத்தெடுத்து வளர்த்துவந்தார். பெரியசாமி மனநலம் பாதிக்கப்பட்டு, மதுப்பழக்கத்துக்கும் ஆளானராம். வெள்ளியன்று வீட்டின் சமையலறையில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பெரியசாமியை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.