திருப்பூர், ஜன. 8 - மக்களைப் பாதிக்கும் பொரு ளாதாரக் கொள்கை, மத அடிப்ப டையில் மக்களைப் பிளவுபடுத் தும் குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால், மத்திய, மாநில அரசுகளுக்குப் பாடம் புகட்டும் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். திருப்பூரில் புதன்கிழமை மத்தி யத் தொழிற்சங்கங்கள் நடத்திய பொது வேலைநிறுத்தப் போராட் டத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் நடத்திய மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறுகை யில், மோடி அரசு கடைப்பிடிக் கும் பொருளாதாரக் கொள்கை யினால் இந்நாட்டின் பொருளா தாரம் திவாலாகிக் கொண்டி ருக்கிறது. வானை முட்டும் அளவுக்கு விலைவாசி ஏறுகிறது. வரலாறு காணாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் பெருகுகிறது. நாடு முழுவதும் சிறு, குறு தொழில்கள் அழி வைச் சந்திக்கின்றன. திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தில் பின்ன லாடை, நூற்பாலை தொழில் கள் நசிந்து நாசமாகிக் கொண்டி ருக்கின்றன. வணிகம், வியாபா ரம், சர்க்கரை, சிமெண்ட் தொழில் கள் நசிவடைந்து கொண்டிருக் கின்றன. போராடிப் பெற்ற தொழிலா ளர் உரிமைகள் பறிக்கப்படும் அளவுக்கு மோடி அரசு சட்டம் திருத்தம் செய்துள்ளது. வாகன வைத்திருப்போர் உரிமையைப் பறிக்கும் மோட்டார் வாகன திருத்தச் சட்டம் அமலாக்கப்ப டுகிறது. இதை எதிர்த்து எல்லா தொழிற் சங்கங்களும் சேர்ந்து பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ள னர். நாடு முழுவதும் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் 25 கோடி பேர் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியா முழுவதும் கிராமப் புறத்தில் வறுமையிலும், பட்டினி யிலும் வாடும் விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள் இப் போராட்டத்தை ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். குடியுரிமைச் சட்டம் என குடி கெடுக்கும் சட்டத்தை நிறை வேற்றி இந்நாட்டு மக்களை மதஅடிப்படையில் பிரிவினைப் படுத்தும் மோசமான செயலை நரேந்திர மோடி அரசு கட்ட விழ்த்து விட்டுள்ளது. இதை எதிர்த்து நடைபெறும் இப்போ ராட்டத்தில் தமிகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகளும் அகில இந்திய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருக் கிறோம். நரேந்திர மோடி அரசுக்கு தமிழகத்தில் இருக்கும் எடப்பாடி அரசு காவடி தூக்கும் அரசாக இருந்து கொண்டிருக்கிறது. இலங்கை தமிழர் குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம் நாடா ளுமன்றத்தில் வந்தபோது அதை எதிர்த்து வாக்களித்துவிட்டு, இங்கே இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையைப் பெற் றுத் தர போராடிக் கொண்டிருக்கி றோம் என பொய்யுரையை சட்டமன்றத்திலேயே முதல்வர் சொல்லிக் கொண்டிருக்கிறார். எனவே இந்த மத்திய, மாநில அரசுகளுக்குப் பாடம் புகட்டும் முறையில் உழைப்பாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள், வியாபாரிகள், சிறு குறு தொழில் துறையினர், ஆண்கள், பெண்கள் என அனைவரும் இன்று களம் இறங்கி இருக்கிறார்கள். மோடி அரசு தனது கொள் கையை மாற்றிக் கொள்ளா விட்டால், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் இந்த போராட்டம் இன்னும் தீவிர மடையும். இவ்வாறு கே.பால கிருஷ்ணன் கூறினார்.