அவிநாசி, ஜூன் 11- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்ரமணியன் பணி ஓய்வு பெறும் நாளன்று தற்காலிக நீக்கம் செய்த தைக் கண்டித்து அவிநாசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில தலைவ ருமான மு.சுப்ரமணியன் பணி ஓய்வு பெறும் நாளன்று தற்காலிக நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இதை கண்டித்தும்,தமிழக அரசு பணி ஓய்வு பெறும் ஆணையை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். தவமணி, ரங்கசாமி முன்னிலை வகித்தனர். ரமேஷ் குமார், கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினர். நிறைவாக கிருஷ்ணன் நன்றி கூறினார்.