திருப்பூர், பிப். 12 – திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொது மக்களின் நல னுக்கு எதிராக சில சுயநல சக்திக ளுக்கு ஆதரவாக திருப்பூர் மாநக ராட்சி ஆணையர் க.சிவக்குமார் செயல்படுகிறார். உள்ளூர் எம்.பிக் களையும் அவமதித்து உரிமை மீற லில் ஈடுபடுகிறார். எனவே அவ ருக்கு சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க வேண் டும் என்று பொள்ளாச்சி எம்.பி. கே.சண்முகசுந்தரம் மத்திய அமைச் சருக்கு கடிதம் எழுதியுள்ளார். பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. கே.சண்முகசுந்தரம் மத்திய நகர்ப்புற, வீட்டு வசதித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் எஸ்.பூரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்குவதிலும், செயல்படுத்து வதிலும் உள்ளூர் எம்.பி.க்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்ற விதிமுறை தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மத்திய அரசின் அறிக் கைகளில் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் ஸ்மார்ட் சிட்டி திட் டத்தை பரிசீலனை செய்யும் பணி யில் எம்.பி.க்களை புறக்கணிக்கி றார். பலவிதங்களில் தொடர்பு கொண்டபோதும், தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவ மதித்து, அவர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் இருப்பது தெளி வான உரிமை மீறல் ஆகும். டவுன்ஹால் அரங்கம் இடிக்கப் பட்டது, பூ மார்க்கெட் மற்றும் ஏழை, நடுத்தரக் குடும்ப மாணவ, மாணவி கள் படித்துவந்த மாநகராட்சிப் பள்ளியை இடித்தது என ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பொது நலனுக்கு எதிராக சில குறிப்பிட்ட சுயநல சக்திகளுக்காக இதை மாநகராட்சி ஆணையரும், ஸ்மார்ட் சிட்டி திட்ட நிர்வாக இயக்குநரு மான கே.சிவக்குமார் செய்துள்ளார். இதன் மூலம் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்போது அந்த சுயநல எண்ணம் கொண்டவர்கள் பலன டைவார்கள். இடிக்கப்பட்ட பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கோ, சந்தை யின் சிறு வியாபாரிகளுக்கோ மாற்று ஏற்பாடு எதுவும் செய்து தரப்படவில்லை. இதனால் வியா பாரிகள் தங்கள் சொற்ப வருமா னத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. ஏற்கெனவே நாடாளுமன்றத் தில் 377 ஆவது விதியின் கீழ் இப் பிரச்சனையை எழுப்பி இருக்கி றேன். எனவே, திருப்பூர் மாநக ராட்சி ஆணையர் க.சிவக்குமாரை டெல்லிக்கு வரச் சொல்லி அழைப் பாணை (சம்மன்) அனுப்பி, அவரிடம் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கள் முன்பாக, எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தெளிவு படுத்தும்படி அமைச்சர் உத்தரவிட வேண்டும். துரித நடவடிக்கை எடுத்து, இனிமேலும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கவும், பொது மக்களின் வேதனையைத் தவிர்க்கவும் வேண்டும் என்று கே.சண்முகசுந்தரம் எம்.பி., கேட் டுக் கொண்டுள்ளார்.