திருப்பூர், ஜூன் 27 – இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலைப் பொருட் படுத்தாமல், உழைக்கும் பெண்களை அவமதித்து, மிரட்டி பணம் பறிக்கும் நுண் நிதி (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்களின் அடாவடித் தனத்தை எதிர்த்தும், இந்த நிறுவனங்களின் மிரட்டல் நட வடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கடன் செலுத்த கால அவகாசம் வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங் களில் ஈடுபட்டனர். நுண்நிதி நிறுவன ஊழியர் கள் மன உளைச்சல் ஏற்படுத் தும் வகையில் பெண்களை மிரட்டி பணம் வசூலிக்க வீடு களுக்கு வந்து நச்சரிக்கும் சம் பவங்கள் தொடர் கதையாக இருக்கின்றன. எனவே, நாள் தோறும் மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவல கம், மாநகர மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். எனினும் நிதி நிறுவனங் கள் கடன் தவணை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் செய்தியறிக்கை வெளியிட் டது தவிர, இவர்களது அடாவடித் தனத்தை தடுத்து நிறுத்த வேறு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் ஏழை, எளிய, நடுத்தரப் பெண்களின் வாழ்வாதார நெருக்கடியைப் புரிந்து கொண்டு நிதி நிறுவனங்களின் அச் சுறுத்தல், மிரட்டல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், ஊத்துக்குளி, பொங்கலூர், அவிநாசி உள்பட பல்வேறு பகுதிகளில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, ஒன்றியச் செயலாளர்கள், கிளை செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.