உடுமலை, ஜூன் 13- தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் உடுமலை வட்டாட்சியர் அலுவல கத்தில் மூன்றாவது நாளான வியாழனன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வருவாய்த்துறை கிராம உதவியாளர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கனிம வள கொள்ளையர்கள் மற்றும் வெடி மருந்து பயன்படுத்தி கிணறு வெட்டுபவர்களிட மிருந்து கிராம உதவியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை உதவியாளர் சங்கத்தினர் உடுமலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, வட்டக்கிளைத் தலைவர் திலீப் தலைமை வகித்தார். செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் காந்திராஜ்,முத்துச்சாமி உள் ளிட்ட கிராம உதவியாளர்கள் பங்கேற் றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜமாபந்தி உடுமலை தாலுகா அலுவலகத்தில் வியாழனன்று துவங்கி உள்ள நிலையில், கிராம உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.