tamilnadu

கோடை மழை: உழவுப்பணியை தொடங்கிய விவசாயிகள்

திருப்பூர், ஏப். 26 –திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கோடைமழை பெய்துவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பெய்தது.இதேபோல் திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்கள் கன மழை பெய்தது. இதை பயன்படுத்தி தற்போது கிராமப்புறங்களில் விவசாயிகள் கோடை உழவுப்பணிகளை செய்து வருகின்றனர்.