tamilnadu

குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: விஷம் குடித்த தாயும் பலி

 திருப்பூர், ஏப். 26 – கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவத்தில் ஏற்கெனவே குழந்தையும், தந்தையும் பலியானார்கள். இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார்.திருப்பூர் பெருந்தொழுவு அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் கந்துவட்டிக் கடன் நெருக்கடி காரணமாக விவசாய கூலித்தொழிலாளி சதிஷ்குமாரும், அவரது மனைவி தவமணியும் தென்னை பூச்சி மாத்திரை உட்கொண்டனர். அத்துடன் தங்கள் 3 வயது மகள் மோனிகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தனர். இதில் சதிஷ்குமாரும், அவரது மகளும் வியாழனன்று உயிரிழந்தநிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவமணியும் சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளியன்று உயிரிழந்தார்.கந்துவட்டிக் கடன் தொல்லை காரணமாக குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவிநாசிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.