tamilnadu

img

லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளரை கண்டித்து போராட்டம்

தாராபுரம், ஜூன் 12 - தாராபுரத்தில் வருமான சான்று வழங்க லஞ்சம் கேட்ட வருவாய் ஆய் வாளரை கண்டித்து விவசாய கூலி தொழிலாளி தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார். தாராபுரம் வட்டம், கொளத்துப்பா ளையம் பேருராட்சி, ஆலாம்பாளை யம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (54). விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு களை செய்து வருகிறார்.

இதைய டுத்து, தமிழக அரசு திருமண உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்காக வருமான சான்று கேட்டு கடந்த ஜூன் 3 ஆம் தேயன்று தாராபுரம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், தாராபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து  முருகனை தொடர்பு கொண்டு வரு மானம் குறித்து விசாரித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து முருகன் ஆய்வா ளர் அலுவலகத்திற்கு சென்றபோது தாராபுரம் வருவாய் ஆய்வாளர் மகேந் திரவில்சன் கூலிதொழிலாளி முருகனி டம் வருமான சான்று வழங்க ரூ.500 கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், முருகன் அத்தொகையை தர மறுத்ததால் வருவாய் ஆய்வாளர் சான்று வழங்குவதை காலதாமதம் செய்துள்ளதாக தெரிகிறது. இதைய டுத்து, முருகன் வெள்ளியன்று காலை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியுடன் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு லஞ்சம் கேட்ட வரு வாய் ஆய்வாளர் மகேந்திர வில்சனை கண்டித்தும், தனக்கு வருமான சான்று வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை அட்டையுடன் தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல றிந்து வந்த தாராபுரம் வட்டாட்சியர் கனகராஜ் விசாரித்து உடனடியாக சான்று வழங்கப்படும் என உறுதி கூறி னார். இதையடுத்து முருகன் போராட் டத்தை விலக்கி கொண்டார். இச்சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.