திருப்பூர், ஆக. 20- திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத் துக்கு உட்பட்ட வேலம்பாளையம் நகரப் பகுதிகளில் குப்பை கொட்டும் இடங்களில் கடும் துர்நாற்றம் வீசுவதால் முறையாக சுத் தம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் வியாழ னன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி, முத லாம் மண்டல வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி சாலையோரங்களில், குடியிருப்புக ளின் வீதிகளில் குப்பைகளையும், கழிவு களையும் கொட்டுவதற்காக மாநகராட்சி வைத்துள்ள குப்பைத் தொட்டிகளில் இருந்து துர்நாற்றம் வீசிச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், குடியிருப்புப் பகுதி வீதிகளில் குப் பைத் தொட்டி இல்லாத இடங்களில் கொட் டப்படும் குப்பைகள், கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் சுற்றுப்புறச் சுகாதா ரம் கேள்விக்குள்ளாகிறது. இது மழைக் காலமாக இருப்பதால், விரைவாக நோய்த் தொற்றும் அபாயமும் உள்ளது. மேலும், இந்த வார்டுகளில் அமைக்கப் பட்டுள்ள கழிவுநீர் வடிகால்களும் தூர் ்வாரப்படாமல், கழிவுகளால் அடைத்துக் கொண்டும், மழை நீரும், கழிவுநீரும் வெளி யேற வழியின்றி சாலைகளில், சாக்கடை களில், குடியிருப்புகளில் தேங்கி நின்றும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.
எனவே குப்பைத் தொட்டிகள், குப்பைக் கழிவு சேகரிக்கும் வண்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் தூய்மைப்படுத்துவ தோடு, குப்பை கொட்டும் இடங்களில் மருந்து தெளித்து, சுத்தப்படுத்தி சுகாதாரம் பேண வேண்டும். எனவே குடியிருப்புப் பகுதிகளில் மற் றும் முக்கிய சாலையோர கழிவுநீர்க் கால் வாய்களை முழுமையாகத் தூர்வாரி, கழிவு நீர் வெளியேற்றத்தை முறைப்படுத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. இது தொடர்பாக முதல் மண் டல உதவி ஆணையருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளதாகவும் வி.பி.சுப்பிர மணியம் தெரிவித்துள்ளார்.