tamilnadu

அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்க சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் சிபிஎம் மனு

அவிநாசி, ஆக. 29- அவிநாசி அடுத்து திருமுருகன்பூண்டி யில் வியாழனன்று தமிழக முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் மக்களின் அடிப் படை பிரச்சினைகளை தீர்வு காணக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூரிலிருந்து அவிநாசி செல்லும் சாலை யில் ராமகிருஷ்ணா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் காலை மற்றும்  மாலை நேரங்களில் பள்ளி நிர்வாகம் இரண்டு சக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்து வருபவர்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி வைக் கின்றனர். இதனால் போக்குவரத்து நெரி சல் ஏற்படுகின்றது. இதனால் சில நேரங் களில் விபத்தும் கூட நேரிட வாய்ப்புள்ளது.  மேலும் பள்ளி அருகே குப்பைத் தொட் டியை பேரூராட்சி நிர்வாகம் வைத்துள் ளது.  இதனால்  பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் இந்த குப்பை தொட் டியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். 8, 9 ஆவது வார்டுகளில் பழுத டைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீர் செய்ய வேண்டும். அப்பகுதியில் புதிதாக சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் திருப்பூர் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற் பட்டு தினசரி பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாவதை சீர் செய்ய வேண்டும். அம்மா பாளையம் அரசு உயர்நிலைப்  பள்ளியினை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். ரேசன் கடை முன்பு கூரை அமைக்க வேண்டும். வாரம் ஒருமுறை அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதேபோல்,சேவூர் ஊராட்சி மன்றத்தில் தமிழக முதல்வர் குறைதீர் கூட்டத்தில் அவிநாசி வட்டாட்சியர் சாந்தி,  அவிநாசி ஒன்றிய ஆணையாளர் ஹரிகரன், வட் டார வளர்ச்சி  (ஊராட்சி) அலுவலர் சாந்தி லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் பட்டா மாறுதல், நத்தம் புறம்போக்கு பட்டா, இலவச வீட்டுமனைப் பட்டா, முதி யோர் உதவித்தொகை உள்பட மனுக்க ளும், தெருவிளக்கு, தடுப்பணை, தரை மட் டப்பாலம் உயர்த்துதல், தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்தனர்.  மேலும், சேவூர் ஊராட்சிக்குட்பட்ட ராக்கம்பாளையத்தில் 110 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.  மழைக்காலங்களில் மழை நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்து கொள்கிறது. ஆகவே மழைநீர் செல்வதற்கு நீரோடை அமைக்க வேண் டும். அதே போல் நீரோடை செல்லும்  தடுப் பணையின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதால், 5 அடி உயர்த்தி கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.  இதேபோல், அவிநாசி ஒன்றிய குறிஞ்சி யர் சமூக நீதி பேரவையின் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, குறவர் இன மக்கள்  170க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு கட்ட இடம், சமுதாய கூடம், குழந்தைகள் விளையாட பூங்கா அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இம்முகாமில் சேவூர் நில வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சேவூர் கிராம நிர் வாக அலுவலர் சுபாஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், சேவூர் ஊராட்சி செயலர் கண்ணன் உள் பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண் டனர்.