திருப்பூர், பிப். 22 – உயர்மின் கோபுரம், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் அமைப்பது ஆகிய பணிகளுக்காக கையகப் படுத்தும் விவசாய விளைநிலங்க ளுக்கு இழப்பீடு நிர்ணயிப்பதில் பாரபட்சம் காட்டுவதைக் கண் டித்து பிப்ரவரி 26ஆம் தேதி ஏழு எம்.பி.க்கள் பங்கேற்கும் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படுகி றது. தமிழகத்தில் பவர்கிரிட் நிறு வனமும், தமிழ்நாடு மின் தொடர மைப்புக் கழகமும் இணைந்து 14க்கும் மேற்பட்ட மின் திட்டங் களை அமல்படுத்துகின்றன. அத்துடன் ஐடிபிஎல் நிறுவனத் தின் எண்ணெய் குழாய் அமைக் கும் திட்டமும் விவசாய விளை நிலங்கள் வழியாக அமைக்கும் திட்டப்பணி தொடங்கப்பட்டுள் ளது. இதற்கு எதிராக விவசாய கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக உயர்மின்கோபுரங் கள் அமைக்கப்படும் விளைநிலங் களுக்கு 2013ஆம் ஆண்டு நில எடுப்புச் சட்டப்படி சந்தை மதிப் பில் இழப்பீடு நிர்ணயித்து வழங்க வேண்டும், நிலத்தில் கிணறு, ஆழ் துளைக் குழாய் கிணறு, வீடு, கோழிப்பண்ணை போன்ற கட்டுமானங்களுக்கும் சந்தை மதிப்பில் நான்கு மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும், தென்னை மரத்துக்கு கோவை மாவட்டத்தில் நிர்ணயித்த இழப்பீட்டைப் போல இங்கும் வழங்க வேண்டும், சட் டப்படி இழப்பீடு வழங்காமல் வேலை செய்வதை கண்டிப்பது டன், உயர்மின் கோபுரம் கம்பி வழிப் பாதையைக் குறிக்கும் வரைபடம் உள்ளிட்ட ஆவணங் களை பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு முறையாக வெளிப்படைத் தன்மையுடன் வழங்க வேண்டும் என்றும், ஐடிபிஎல் திட்டத்தை விளைநிலங்கள் வழியாக அமல் படுத்தாமல் சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கைகளை முன் வைத்து வரும் புதன்கிழமை பிப்.26ஆம் தேதி பல்லடம் என்ஜி ஆர் சாலையில் மாபெரும் கண்ட னக் கூட்டம் நடத்தவும் விவசாயி கள் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதில் இந்த மண்டலத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நட ராஜன், அ.கணேசமூர்த்தி, கே.சுப்பராயன், எஸ்.சண்முக சுந்தரம், ஏ.கே.சின்ராஜ், எஸ்.ஜோதிமணி, பி.வேலுச்சாமி ஆகிய ஏழு பேர் பங்கேற்று சிறப் புரை ஆற்ற உள்ளனர். இந்த கூட்டத்தை வெற்றிகர மாக நடத்துவது தொடர்பாக பல்லடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு அலுவலகத் தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவ சாயக் கூட்டமைப்பின் நிர்வாகி கள், விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். ஆயிரக் கணக்கான விவசாயிகளைப் பங்கேற்கச் செய்து புதன்கிழமை நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்து வது என்றும், இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு மேற்கு மண்டல விவசா யிகள் பெருந்திரளாகப் பங்கேற் கும்படியும் கூட்டமைப்பு சார் பில் வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.