tamilnadu

img

கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு

உடுமலை, மார்ச் 7- கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவானது இராகல்பாவி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.  இந்நிகழ்வானது உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் இராகல்பாவி கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது. குழந்தை களின் பாதுகாப்பினை உறுதி செய்வது கிராம அளவிலான குழந் தைகள் பாதுகாப்பு குழுவின் முக்கிய நோக்கமாகும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்துதல், கிராம மற்றும் வட்டார அளவில் அவர்களுடைய அதிகார எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் குழந் தைகள் இடைநிற்றல் இல்லாமல் பார்த்துக்கொள்வது,  குழந்தை தொழி லாளர்கள் இல்லாத நிலையை உரு வாக்குவது, குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பது போன்றவற்றை குறிக்கோளாக கொண்டு இக்குழுக் கள் செயல்படும்.  கிராம ஊராட்சி தலைவர் இக்குழு வின் தலைவராக இருப்பார். கிராம நிர்வாக அலுவலர் குழு கூட்டுனராக செயல்படுவார். மேலும் மேல்நிலைப் பள்ளி அல்லது உயர்நிலைப்பள்ளி அல்லது நடுநிலைப்பள்ளி அல்லது தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், தேர்வு செய்யப்படும் இரு பள்ளிக்குழந்தைகள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகின் உறுப் பினர், அங்கன்வாடி பணியாளர், கிராம செவிலியர், கிராமத்தில் சிறப் பாக செயல்படும் தொண்டு நிறுவனப் பிரதிநிதி, கிராமத்தில் சிறப்பாக செயல்படும் சுய உதவி குழு உறுப்பி னர், உள்ளூர் காவல் நிலைய பிரதிநிதி ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாகக் சேர்க்கப்பட்டுள் ளனர்.  மேலும்,தாய்தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு உதவுவதற்காகவும் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக  திருப்பூர் மாவட்ட குழந்தை பாது காப்பு அலகின் உறுப்பினர் ராஜசேகர் கூறினார். இந்நிகழ்வில் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.