tamilnadu

பினாமி நிறுவனங்கள் மூலம் ரூ.59 லட்சம் ஊழல்! கேத்தனூர், எலவந்தி ஊராட்சி செயலர்கள் மீது புகார்

திருப்பூர், செப். 4 – திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேத்தனூர், எலவந்தி ஊராட்சிகளில் தங்கள் உறவி னர்கள் பெயரில் பினாமி நிறுவனங் களை உருவாக்கி ரூ.59.17 லட்சம் முறை கேடு செய்திருப்பதாக கேத்தனூர், எல வந்தி ஊராட்சிகளின் செயலர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

இது பற்றிய விபரம் வருமாறு: கேத்த னூர் ஊராட்சிச் செயலராக இருப்பவர் சிவசுப்பிரமணியம், எலவந்தி ஊராட்சி செயலராக இருப்பவர் சரவணக்குமார். இவர்கள் இருவரும் கூட்டுசேர்ந்து தங் கள் மனைவி மற்றும் உறவினர்கள், நண் பர்கள் பெயரில் பினாமி நிறுவனங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இதன் மூலம் ஊராட்சிக்குத் தேவையான பொருட்கள் வாங்கியதாக பில்கள் தயா ரித்து இரு ஊராட்சிகளின் பொது நிதி யில் இருந்து ரூ.59 லட்சத்து 17ஆயி ரத்து 85 பணத்தை வழங்கி ஊழல் செய்தி ருப்பதாக கேத்தனூர் பெரியதோட்டம் பகுதியைச் சேர்ந்த கே.சிவக்குமார் என்பவர் புகார் கூறியுள்ளார்.

 மேலும், இந்த ஊழல் தொடர்பாக தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிக ளுக்கு விரிவான புகார் கடிதம் அனுப்பி யுள்ளார். இதில், கேத்தனூர் ஊராட்சிச் செயலர் சிவசுப்பிரமணியத்தின் மனைவி காருண்யா. இவர் உரிமையா ளராக இருந்து, கேத்தனூர் சாவடிபாளை யத்தில் இனியா இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் தொடர்பு அலை பேசி எண்ணாக 97500 10748 குறிப்பி டப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எண் ஊராட்சிச் செயலர் சிவசுப்பிரமணியம் அன்றாடம் பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டு உள்ளது.  அதேபோல், எலவந்தி ஊராட்சிச் செயலர் சரவணக்குமாரின் மனைவி ரேவதி. இவர் உரிமையாளராக இருந்து கேத்தனூர் ஸ்ரீ வாரி காம்ப்ளக்ஸில் அருள் நந்தி அன் கோ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அதே போல் எய்ம் எலக்ட்ரிக்கல்ஸ் என்ற பெய ரில் குணசேகர், ஸ்ரீ அங்காளம்மன் டிரே டர்ஸ் என்ற பெயரில் பழனிச்சாமி மற்றும் கோவிந்தசாமி, ஸ்ரீராம் டிரேடர்ஸ் அன்ட் ஏஜென்சிஸ் என்ற பெயரில் ரகு நாதன் ஆகியோர் இவர்களது உறவினர்களாவர், இவர்கள் தனி நிறுவ னங்களை நடத்தி வருகின்றனர். மேறு படி நிறுவனங்களின் பெயரில் பில்கள் மற்றும் விலைப்புள்ளிகள் தயாரித்து சட்டப்படி ஐஎஸ்ஐ முத்திரைகள் இலு லாத பொருட்களை ஊராட்சிகளுக்குப் பெற்று அதற்கு காசோலைகள் வழங்கழு பட்டுள்ளது.

குறிப்பாக எலவந்தி ஊராட்சியில் இருந்து இனியா இன்ஜினியரிங் நிறு வனத்துக்கு ரூ.2,31,841-க்கும், ஸ்ரீ அங் காளம்மன் டிரேடர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.278,604-க்கும், அருள்நந்தி அன் கோ  ஷிறுவனத்துக்கு ரூ.2,67,308-க்கும் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கேத்தனூர் ஊராட்சியில் இருந்து இனியா எலக்ட்ரிக்கல்ஸூக்கு ரூ.5,96,537-க்கும், ஏஜி ஏஜென்சிஸுக்கு ரூ.1,33,080-க்கும், எயிம் எலக்ட்ரிக்கலு ஸுக்கு ரூ.8,96,685க்கும், இனியா இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு ரூ.6,11,060க்கும், அருள்நந்தி அன் கோ நிறுவனத்துக்கு ரூ.11,66,035க்கும், ஸ்ரீ அங்காளம்மன் டிரேடர்ஸ்க்கு ரூ.17, 35,935க்கும் காசோலைகள் வழங்கழு பட்டுள்ளன. ஊராட்சிச் செயலர்கள் அரசு ஊழியர் கள் என்ற முறையில் விதிமுறையை மீறி, தங்கள் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் நிறுவனங்களை நடத்தி, பில் களையும் தயாரித்து ஊராட்சியின் பொது நிதியை மோசடி செய்துள்ளனர் என்று கே.சிவக்குமார் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச் சித் துறை உயர் அலுவலர்களுக்குப் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சிவக்குமார் கூறி யுள்ளார். அத்துடன் இந்த ஊழல்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு இயக்ககத்தின் இயக்குநருக் கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த புகார் மீது சட்டப்படி தேவையான நட வடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பதில் கூறியுள்ளார்.

அதேசமயம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து, இந்த இரு ஊராட்சி செயலர்க ளின் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை அனுப்பும் படி பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவ லருக்கு குறிப்பாணை அனுப்பியுள்ள னர்.

ஆனால் மேற்படி  இரு ஊராட்சிக ளுக்கும் பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்)-தான் தனி அலுவலராக செயல்பட்டவர் என்ப தால் அவரையே விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பச் சொல்லியிருப்பது உண்மையை வெளிக் கொண்டுவர உத வாது, மாவட்டத்தின் வேறு உயர் அதிகா ரிகள் அல்லது வேறு மாவட்ட அதிகாரி களைக் கொண்டு இந்த ஊழல்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவக்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து எலவந்தி ஊராட்சி செயலர் சரவணக்குமாரிடம் கேட்டபோது, தனது உறவினர்கள் நிறுவனங்கள் நடத்தி வருவதற்கும் தனக் கும் தொடர்பில்லை, மேலும் ஊராட்சி நிதியை செலவிடும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கும், தனி அலுவலருக்கும் தான் உள்ளது. இதில் நாங்கள் எதுவும் தவறு செய்யவில்லை. மேலும் இந்த புகார் தொடர்பாக துறைரீதியாக விசா ரணை செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.

உள்நோக்கத்துடன் எங்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஊராட்சிகள் தணிக்கை உதவி இயக்கு நரிடம் கேட்டபோது, இந்த புகார் குறித்து பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலு வலர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப் பிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அரசு ஊழி யரின் குடும்பத்தார் வேலை செய்யும் ஊராட்சிக்குள் தொழில், வியாபாரம் செய்யக் கூடாது.

விசாரணை அறிக்கை வந்தவுடன் அதன் அடிப்படையில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.  அதேசமயம் புள்ளிவிபரங்களுடன் தெளிவாக புகார் கூறப்பட்டு 3 மாதங்க ளுக்கு மேலாகியும் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறுகிறது. ஆனால் இதில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் காலம் கடந்து வதாகத் தெரிகிறது. எனவே இந்த ஊழ லில் மேல்மட்டம் வரை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுவதாக எதிர்தரப்பினர் கூறு கின்றனர். இந்த சூழலில் மாவட்ட நிர்வா கம் வெளிப்படையான, நேர்மையான விசாரணை நடத்தி உண்மையை மக்க ளுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசி யம்.

(ந.நி)