tamilnadu

img

வாலிபர் சங்கம் நடத்திய குடியரசு தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா

திருப்பூர், ஜன. 26 – திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளில் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருப்பூர் தெற்கு ஒன்றியம் ஆர்.வி.ஈ.நகர் பகுதி, இடுவம்பாளையம் மற்றும் வடக்கு மாநகரம் நெச வாளர் காலனி, குலாம் காதர் லே அவுட் ஆகிய பகுதி களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார் பில் மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. இதில் குழந்தைகள், இளைஞர்கள், பெண்களுக் கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத் தப்பட்டன. முன்னதாக தேசியக் கொடியும், வாலி பர் சங்கத்தின் வெண்கொடியும் ஆங்காங்கே ஏற்றி வைக்கப்பட்டன. இதில் வாலிபர் சங்க  மாவட்ட தலைவர் பா.ஞானசேகரன் உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். ஆர்.வி.ஈ.நகர், இடுவம்பாளையம், குலாம் காதர் லே அவுட் ஆகிய பகுதிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார். இதில் கருமாரம்பாளையம் கிளையில் வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.