அவிநாசி, ஜூலை 2- அவிநாசியை அடுத்த ஆலத்தூர் பகுதியில் ரேசன் பொருட்களுக்கு பணம் கேட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி மக்கள் கடை ஊழியருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழு வதும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியா மல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இத னைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பபில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலை யில், அவிநாசி ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சியில் ஜூலை மாதத்திற்கு உண்டான ரேசன் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்ற பொதுமக்களிடம், கடை ஊழியர் பணம் கேட்டதால் அதிர்ச்சியடைந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ரேசன் கடை ஊழியர் கூறுகையில், ஜூலை மாதத்தில் இருந்து அரிசி மட்டும் இலவ சமாக வழங்கப்படும். மீதமுள்ள உணவுப் பொருட்க ளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என மாவட்ட வழங்கல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது என்று பொதுமக்களிடம் விளக்கி கூறினார். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பலர், கையில் பணம் இல்லாமல் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.