tamilnadu

img

கல்வியாண்டு தொடக்கத்திலேயே நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக

திருப்பூர், ஜூன் 13 - மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதி வண்டி, பஸ் பாஸ், சீருடை, பாடநூல் உள் ளிட்ட நலத்திட்ட உதவிகளை கல்வி ஆண்டு  தொடக்கத்திலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். வியாழக்கிழமை காலை இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  முகிலன் தலைமையில் மாவட்டச் செய லாளர் சம்சீர் அகமது உள்பட 50க்கும் மேற் பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி அலுவலர் அலுவ லகத்தை முற்றுகையிடச் சென்றனர். ஆனால் ஆட்சியரக  அலுவலக நுழை வாயிலில் அவர்களைக் காவலர்கள் தடுத்து  நிறுத்தினர். அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் நடவ டிக்கைகளின் ஒரு பகுதியாக மேல்நிலை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும் மதிய  உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், தமிழக மாணவர்களின் மருத்துவக்  கனவை கானல் நீராக மாற்றி வரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர் நலத்திட்ட உதவிகளை கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே வழங்கி மாணவர்கள் பயனடைய வழி செய்ய வேண்டும். அரசு மேல்நிலை வகுப்புகளில் சேரும் மாணவர்களிடம் ஏதேனும் காரணத்தைச் சொல்லி கட்டணம் வசூலிப் பதை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மையமாக வைத்து இப்போராட்டத்தை மாணவர் சங்கத்தினர் நடத்தினர்.  இதையடுத்து இக்கோரிக்கைகள் மீது  அரசு நிர்வாகத்தின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்டு நிறைவேற்ற முடிந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாகவும், மாநில அரசு கொள்கை சார்ந்த பிரச்சனைகளை அங்கு  அனுப்பி வைப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது.