tamilnadu

img

வன விலங்குகளின் தாக்குதலிலிருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திடுக

உடுமலை, பிப். 2- காட்டுப்பன்றி, யானைகளின் தாக்குதலிலிருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரிடம் உடு மலை பகுதி விவசாயிகள் மனு அளித் தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை, மடத்துக்குளம், கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் திண் டுக்கல் மாவட்டம், பழனி உள்ளிட்ட வட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை யிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரம் வரை காட்டுப்பன்றிகள் வந்து விட்டன. அதுமட்டுமில்லாமல் அவை கிராமப்புறங்களிலுள்ள விவ சாய பூமிகள், நீர் நிலைகள் மற்றும் பள்ளம் படுகைகளில் குட்டி போட்டு  தங்கி ஆயிரக்கணக்கில் பெருகிவிட் டன. காட்டுப்பன்றிகளால் மனித உயிர் களுக்கும், விவசாயிகளின் பயிர்க ளுக்கும் தொடர்ந்து பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்த மாக மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் தமிழக அரசிடமும் பல முறை மனு அளித்தும் தீர்வு ஏற்படவில்லை.  அதனால்  உடுமலைப்பேட்டையில் வனத்துறை அலுவலகம் முன்பு, ஊருக்குள் வந்து தங்கி விட்ட  காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மற்ற வனவிலங்குகளிடம் இருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க  வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு உடனே வழங்க வேண் டும் என வலியுறுத்தி கடந்த ஜன.17 ஆம் தேதியன்று பல ஆயிரம் விவசாயி கள் கலந்து கொண்ட காத்திருப்பு  போராட்டம் நடைபெற்றது. இதனைத்  தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரின் அழைப்பின் பேரில் நடந்த பேச்சு வார்த்தையில், அவர் கொடுத்த உத்தர வாதத்தின் பேரில் காத்திருப்பு போராட் டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின் னர் மாவட்ட வன அலுவலருடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வன அலுவலரும் தமிழக  அரசுக்கு விவசாயிகளின் கோரிக்கை களை வழிமொழிந்து அறிக்கை அனுப்பினர்.  ஆனால் தற்பொழுது காட்டுப்பன்றி களால் உயிரிழப்பு ஏற்படுவதும், படு காயம் அடைவதும், காட்டு யானை களால் பெரும் சேதம் ஏற்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது. எனவே, இது சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் எரிசினம்பட்டி யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஞாயிறன்று கோலார்பட்டியில் கால்நடை பராமரிப் புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணனை சந்தித்து உடுலை விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதில் தமிநாடு விவசாயிகள் சங்கம், அனைத்து விவ சாய அமைப்புகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும், கோரிக் கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.