திருப்பூர், ஜூலை 13- அரசு உத்தரவை மீறி பொது மக்களிடம் கடன் தொகையை வசூ லிக்கும் தனியார் நிதி நிறுவனங் கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப் பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மற் றும் நீலகிரி மாவட்ட ஆட்சியரி டம் பாதிக்கப்பட்ட பெண்கள், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங் கத்தினர் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு கார ணமாக, பொதுமக்கள் வேலை இழந்து, வருமானம் இன்றி உண வுக்கு வழியில்லாமல் சிரமப்படு கின்றனர்.
இந்நிலையில், சுய உதவிக் குழுக்கள் கடன், சிறு, குறு விவசாயிகள், தொழிலாளர்கள் தனியார் வங்கிகளில், பைனான்ஸ் ஆகியவற்றில் வாங்கிய கடன் களை உடனடியாகக் கேட்டு துன்பு றுத்தக் கூடாது என்றும், அதிக வட்டி வசூலிக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி மற்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அவ்வுத்தரவை மீறும் விதமாக அதிரடியாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், எச்டிபி பைனான்ஸ் நிறுவனம், எக்விடாஸ், எல்.என்.டி போன்ற தனியார் நிதி நிறுவ னங்கள் கொடுத்த கடனுக்கு பல மடங்கு வட்டியுடன் கடனை வசூ லிப்பதற்காக தற்போது களமிறங் கியுள்ளனர்.
ஒவ்வொரு வீடாக கலெக்சன் என்ற பெயரில் அடி யாட்களை அனுப்பி வீட்டில் தனி யாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறிவரும் செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. காவல்துறையும் இதுகுறித்து தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. ஏழைகளை வாட்டி வதைக்கும் இது போன்ற தனியார் நிறுவனங்களின் லைசென்ஸை ரத்து செய்ய வேண் டும். மேலும் கடன் கேட்டு தொந்த ரவு செய்யாமல் காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டு மென அந்த மனுவில் தெரிவித்தி ருந்தனர்.