உடுமலை, ஜூலை 17- மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்ட கூலியை வழங்கக்கோரி மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் செவ்வாயன்று உடு மலை மின்வாரிய அலுவல கத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சாரவாரியத்தில் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். தமிழக அரசு ஏற்றுக் கொண்ட கூலி ரூ.380 யை மின்வாரியத்தில்பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். தற்போது அரசு அறிவித்த கேங்-மேன் பணியாளர்கள் தேர்வில் வயது வரம்பை தளர்த்தி ஒப்பந்த ஊழியர்களுக்கு முன் னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு உடுமலை திட்டத்தலைவர் ஜெகானந்தா தலைமை தாங்கினார். சிஐடியு திருப்பூர் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். ஜெகதீசன், திட்ட செயலாளர் கிருஷ்ண குமார், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் லிங்கவேல் மற்றும் கோவிந்தன், ராம லிங்கம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.