tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சிபிஎம் சார்பில் பிரச்சாரம், கையெழுத்து இயக்கம்

அவிநாசி, ஜூலை 30- புதிய கல்விக் கொள்கை வரைவை  எதிர்த்து அவிநாசி, உடுமலை பகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் பிரச்சாரம் மற்றும் கையெழுத்து  இயக்கம் நடைபெற்றது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை  வரைவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில்பாரதி நகர், ஆட்டை யாம்பாளையம்,முத்துசெட்டி பாளையம், அவிநாசி, அவிநாசிலிங்கம் பாளையம், அவிநாசி தாலுகா அலுவலகம்  முன்பு, பச்சாம்பாளையம், பெரியாயி  பாளையம், திருமுருகன்பூண்டி ஆகிய  பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  இந்த பிரச்சார இயக்கத்திற்கு  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் எஸ். வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.முத்து சாமி, ஏ.ஈஸ்வரமூர்த்தி,  ஒன்றிய குழு உறுப் பினர்கள், ஆர்.வேலுச்சாமி, பி.கனகராஜ், ஏ.சண்முகம், ஆர்.பழனிச்சாமி, ஏ.ராஜன், ஆர்.பாலசுப்பிரமணி, கே.முருகன், பி.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

உடுமலை
இதேபோல் உடுமலை நகரில் நகர செய லாளர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் நகரக்குழு உறுப்பினர் தண்ட பாணி, கிளை செயலாளர் கனகராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம்
இதேபோல் மடத்துக்குளம் தாலுகா நால்ரோடு பகுதியில் தொடங்கி கணியூர்,  கொமரலிங்கம், கொழுமம் ஆகிய பகுதி களில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்திற்கு தாலுகா செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் ஆர்.வி.வடிவேல், முத்துசாமி, எம்.எம்.வீரப்பன், கார்த்திகேயன், ராஜ ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். உடுமலை ஒன்றிய செயலாளர் கி. கனகராஜ் தலைமையில் ஜல்லிபட்டி, பள்ளபாளையம், கொடிங்கியம்,காந்திநகர், எரிசனம்பட்டி, பாலம்பம்பட்டி,மருள்பட்டி பகுதிகளில் பொதுமக்களிடையே பிரச் சாரமும், கையெழுத்து இயக்கமும் நடை பெற்றது. பாலதண்டபாணி, ராஜகோபால், ரங்கராஜ், ஜெகதீசன், பரமசிவம், முத்து சாமி, பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.