அவிநாசி, டிச. 7- அவிநாசியை அடுத்த சேவூர் குதியில் பேருந்துகள் நின்று செல்லாததால் பயணிகள், பொதுமக்கள் பெரும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சியில், ராக்கம்பா ளையம், கிளா குளம், சந்தையப் பாளையம், காமராஜ் நகர், பாளியக்காடு, ஒச்சம்பாளையம், கன்னடாங்குளம், சேவூர் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வசித்து வருகின்றனர். மேலும், அருகில் உள்ள முறியாண்டாம்பாளையம், பாப்பாங்குளம் மற்றும் வேட்டு வபாளையம் ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை, திருப்பூர், கோபி உள்ளிட்ட பகுதிகளுக்கு உயர்கல்விக்காக வும், தொழில் நிமித்தமாக சென்று வர பிரதான பேருந்து நிறுத்தமாக சேவூர் பேருந்து நிறுத்தத்தையே பயன்படுத்து கின்றனர். இதற்காக சேவூரில் காவல் நிலையம், கைகாட்டி ரவுண்டானா என இரண்டு பேருந்து நிறுத்தங்கள் உள் ளன. இந்நிலையில், திருப்பூரிலிருந்து சேவூர் வரை வரும் நகர பேருந்துகள், அவிநாசி வழியாக வந்து சேவூர் கைகாட்டி ரவுண்டானா பேருந்து நிறுத்தம் வழியாக காவல் நிலைய பேருந்து நிறுத்தம் வந்து, பிறகு திரும்பி செல்ல வேண்டும். ஆனால் தனியார் மற்றும் அரசு நகர பேருந்துகள் கைகாட்டி ரவுண்டானாவுடன் திரும்பி செல்கிறது. இதனால், சேவூர் வடக்கு வீதி, சந்தையப்பாளையம், ராக்கம்பாளையம், சிந் தாமணி பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது. அதேநேரம், இது தெரியாமல் பலர் பல மணிநேரம் காத் திருந்து பேருந்து வராததால் திரும்பி செல்லுகின்றனர். இதனால் அவசரமாக செல்லுபவர்கள் குறித்த நேரத்திற் குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், ஒரு சில பயணிகள், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு மன உளைச்சலுக் கும் உள்ளாகின்றனர். இது குறித்து பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித் தும் போக்குவரத்து துறையும், அரசு நிர்வாகமும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டு கின்றனர்.