tamilnadu

img

அவிநாசி அருகே பழமையான தானியக்கிடங்கு கண்டுபிடிப்பு

அவிநாசி, ஜூன்16- அவிநாசி அருகே ராமநாதபுரம் பகுதி யில் செவ்வாயன்று பழமையான தானியக் கிடங்கு தென்பட்டது. அவநாசி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநா தபுரம் - கானூர் செல்லும் சாலை அருகே பழமை வாய்ந்த கருவலூர் பெருமாள் கோயி லுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலம் உள்ளது. இதில், விவசாயம் செய்வதற்காக  திங்களன்று உழவு செய்துள்ளார். அப்போது, நிலத் தின் மையப்பகுதியில் சுமார் 12 அடி கொண்ட பள்ளம் தென்பட்டுள்ளது.

இத்தக வலை பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவல ருக்கு தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ரவிக்குமார் கூறுகையில், இப்பள்ளம்  தானியக் கிடங்காக இருக்கலாம். இது போன்று சென்னிமலை பகுதிகளிளும் இருக்கின்றது. ஒருமுறை சென்னிமலை பகு தியில்  கிடங்கை ஆய்வு செய்து பார்க்கும் போது தானியத்துடன் பள்ளம் இருந்தாக தெரிவித்தார்.