tamilnadu

குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்திடுக மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர், ஆக.13- வேலம்பாளையம் அடுத்த சோளிபாளையத்தில் ஆமை வேகத் தில் நடந்துவரும் பாலம் கட்டுமா னப் பணி மற்றும் பாட்டையப்பன் நகருக்குள் குண்டும் குழியுமாக வாகன ஓட்டிகளைப் பதம் பார்க்கும் மண்சாலை ஆகியவற்றை விரைந்து சீரமைக்கும்படி மார்க் சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள் ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பா ளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் வியாழனன்று முத லாவது மண்டல நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள் ளதாவது, வேலம்பாளையத்திலி ருந்து கணியாம்பூண்டி செல்லும் சாலையில் சோளிபாளையத்தில் தரைப்பாலம் கட்டுமானப் பணி மாதக்கணக்கில் நடந்து வருகிறது.  திட்டமிடப்படாமல் வேலைகளைத் தொடங்கியதால், இருபக்கமும் தின மும் சென்றுவரும் நூற்றுக்கணக் கான இரு சக்கர, நான்கு சக்கர வாக னங்கள் அனைத்தும் பாட்டையப் பன் நகருக்குள் புகுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  

அப்போது, ஆண்டுக்கணக்கில் பராமரிக்கப்படாத தார்ச் சாலைகள் அனைத்தும், மிகக்கொடூரமான முறையில் ஆழமான குழிகள் மற்றும் மேடுகளாக மாறி, வாகன ஓட்டிக ளுக்கும், அப்பகுதிவாழ் மக்களுக் கும் உடல்ரீதியான பிரச்சினை களை உருவாக்கியுள்ளன. இது பற்றிய செய்திகள் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. எனவே, திருப் பூர் மாநகராட்சி, 1 ஆவது மண்டல நிர்வாகம், சோளிபாளையம் தரைப் பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன் பாட்டுக்குத் திறக்க வேண்டும். பாட்டையப்பன் நகருக்குள் உள்ள அனைத்து வீதிகளிலும் கழிவுநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர மான தார்ச் சாலைகளை உடனடி யாக அமைத்துத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுகொள்வதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது.