திருப்பூர், ஜூலை 30 – கடந்த இரு ஆண்டுகள் மேல் நிலை வகுப்புப் படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு விலையில்லா மடிக்கணினி தராத நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2017 – 18, 18 – 19 ஆகிய இரு கல்வி ஆண்டுகளில் மேல் நிலை வகுப்புப் படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி தரப்படாத நிலையில், திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, நஞ்சப்பா, கேஎஸ்சி, விஜயாபுரம், பெருந்தொழுவு, குடி மங்கலம்,உடுமலைபேட்டை ஆகிய அரசுப் பள்ளிகளில் படித்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன் பாக அணிதிரண்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் தலைமையில், மாவட்டச் செய லாளர் சம்சீர் அகமது, துணைச் செய லாளர் பாலமுரளி, துணைத் தலைவர் பிரவீன் உள்பட இம் மாணவர்கள் ஆட்சியரகத்திற்குச் சென்றபோது, காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆட்சியரக வாயிலில் அரண் அமைக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மடிக்கணினி கேட்டுப் போராட்டம் நடத்தினர். புதிய கல்விக் கொள்கை வேண்டாம். மடிக்கணினி கொடு என்று முழக்கம் எழுப்பினர். மாணவர்கள் மத்தியில் பேசிய மாரியப்பன், திருப்பூர் மாவட் டத்தில் 15 நாட்களில் மடிக்கணினி வழங்குவதாகஆட்சியர் உறுதி யளித்தார். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. மாநிலத்தில் மடிக்கணினி தருவதற்காக பட் ஜெட்டில் நிதி ஒதுக்கியும் மாண வர்களுக்கு மடிக்கணினி தரப் படவில்லை. அந்த நிதி ஒதுக்கீடு என்ன ஆனது என்று அமைச்சர் செங்கோட்டையன் சொல்வாரா? மாணவர்களுக்கு மடிக்கணினி தரும் நிதியில் ஊழல் செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வரு கிறது. பள்ளிக்கூடம் இருந்தால் தான் மாணவர்கள் படிக்க முடியும், மடிக்கணினி கேட்டுப் போராடவும் முடியும். ஆனால் கல்வியையே ஏழை, எளிய மாணவர்களுக்குக் கிடைக்காமல் பறிக்க நினைக் கின்றனர். எனவே புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் மாணவர் சங்கம் போராடி வருகிறது. மாண வர்களைப் பற்றி தேவையில்லாத தவறான வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் மாணவர் சமுதாயம் ஈடுபட்டு மகத்தான பங்களிப்பு செய்துள்ளது. இன்று நாட்டின் சுதந்திரத்திற்கே ஆபத்தான புதிய கல்விக் கொள்கை கொண்டு வருகின்றனர். உயிரைக் கொடுத்தும் இக்கொள்கையை முறி யடிக்க மாணவர் சங்கம் தயாராக உள்ளது. மாணவர்களுக்குத் தர வேண்டிய மடிக்கணினி தராமல் அரசு இழுத்தடித்தால் போராட் டத்தை முன்னெடுப்போம் என்று கூறினார். இதன்பின் மாணவர்களின் பிரதி நிதிகள் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கையை முன்வைக்க காவல் துறையினர் ஏற்பாடு செய்தனர். மாரியப்பன் உள்ளிட்ட நிர்வா கிகள், பள்ளி மாணாக்கர்கள் மாவட்ட ஆட்சியர் பழனி்சாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித் தனர். இது மாநில அரசுசார்ந்த பிரச்சனை என்பதால் அரசுக்குப் பரிந்துரைப்பதாகஆட்சியர் கூறினர். இதையடுத்து மாநில அளவில் உள்ள பிரச்சனை என்ப தால் ஒரு மாத அவகாசம் அளித்து, மடிக்கணினி வழங்காவிட்டால் அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று மாண வர்கள் மத்தியில் மாரியப்பன் கூறி னார்.