திருப்பூர், ஜன. 21 – திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம், குப்புச்சிபாளையத்தில் கூட்டுக்குடும்பமாக வசிக்கும் அருந்த தியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குமாறு விடுத லைச் சிறுத்தைகள் கட்சி கோரி யுள்ளது. இதுதொடர்பாக இக்கட்சியின் நிர்வாகிகள் ஜான் நாக், தமிழ்முத்து உள்ளிட்டோர் குப்புச்சிபாளையம் பொது மக்களுடன் செவ்வாயன்று காங்கேயம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தனிவட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனு வில் கூறியிருப்பதாவது: தாராபுரம் ஒன்றியம், நஞ்சியம்பாளையம் கிராமம், குப்புச்சிபாளையத்தில் அருந்ததியர் சமூகமக்கள் 400 பேர் வசித்து வருகின்றனர். போதிய வீட்டு வசதி இல்லாத நிலையில் ஒரே வீட்டிலேயே தந்தை குடும்பத்துடன், திருமணமான மகன்கள் குடும்பத்தி னரும் கூட்டுக் குடும்பமாக வாழும் நிலை உள்ளது. இம்மக்களுக்கு தமிழக அரசு மூலம் கடந்த 1980ஆம் ஆண்டு இதே குப்புச்சிபாளையத்தில் தனி யார் இடத்தை வாங்கி இலவசப் பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் முன்பு இடம் விற் பனை செய்த முருகேசன் என்பவ ரின் உறவினர் வேலுச்சாமி என்பவர் தனக்குச் சொந்தமான சுமார் 88 சென்ட் நிலத்தை அரசுக்கு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே அந்த இடத்தை வாங்கி வீடு இல்லா மல் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் 41 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு அப்பகுதி பொது மக்கள் சார்பில் விடுதலைச் சிறுத்தை கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.