திருப்பூர், ஜூன் 9 – தொழிலாளர் சட்டங்களைப் பிற்போக்குத்தனமாகத் திருத்தும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் கார்ப்ரேட் முதலாளித்துவத்துக்கு எதிராக அனைத்துப் பிரிவு தொழி லாளர்களும் ஒன்றுபட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் கூறி னார்.
இடுவாய் ஊராட்சி, சீராணம் பாளையம் கிராமத்தில் செவ்வா யன்று தியாகி பழனிச்சாமியின் 41ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கடை பிடிக்கப்பட்டது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்க வேல் தியாகி பழனிச்சாமி நினை விடத்தில் செங்கொடி ஏற்றி, அஞ் சலி செலுத்திப் பேசுகையில்: 40 ஆண்டுகளுக்கு முன்பு திருப் பூர் மேற்குப் பகுதியில் விசைத் தறித் தொழிலாளர்களின் வீரஞ் செறிந்த போராட்டம் நடைபெற்று வந்தது. அந்த போராட்டத்தில் பனியன் தொழிலாளியான பழ னிச்சாமியும் பங்கேற்றார். இந் நிலையில். தான் சமூக விரோதி கள் பழனிச்சாமியைப் படு கொலை செய்தனர். இன்றைக்கு மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர் உரிமை களைப் பறித்து, கார்ப்பரேட் முத லாளிகளுக்கு சாதகமாக சட்டத் திருத்தம் செய்து வருகிறது. இத ற்கு எதிராக தனித்தனி பிரி வாக தொழிலாளர்கள் போரா டினால் போதாது. எப்படி விசைத் த்தறி தொழிலாளர் போராட்டத் தில் பனியன் தொழிலாளி சீரா ணம்பாளையம் பழனிச்சாமி பங் கேற்றாரோ, அதுபோல அனைத் துப் பிரிவு தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராட வேண் டியது அவசியம். தொழிலாளர்க ளுக்கு எதிராக கடுமையான தாக்குதல் தொடுக்கப்படும் நிலை யில் இது மிகவும் முக்கியமானது, என தங்கவேல் குறிப்பிட்டார்.
முன்னதாக கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோ பால், கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சிமன்றத் தலை வர் கே.கணேசன், ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் சர்மிளாதேவி மற்றும் கட்சிக் கிளைச் செயலா ளர்கள் கே.கருப்புசாமி, ஏ.கே. குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சீராணம்பாளை யம் கிளைச் செயலாளர் கே.ஈஸ் வரன் தலைமை ஏற்றார். வாலிபர்கள் ரத்த தானம் சீராணம்பாளையம் தியாகி பழனிச்சாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார் பில் ஞாயிறன்று முதலாம் ஆண்டு ரத்த தான முகாம் சீராணம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாலிபர் சங்கக் கிளை செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. ரத்த தானக் கழகத் தலைவர் ஆர்.சிவசண்முகம் வாலிபர் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். இடுவாய் ஊராட்சிமன்றத் தலை வர் கே.கணேசன் முகாமைத் தொடக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டத் துணைச் செய லாளர் துரை.சம்பத், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கே.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த் தினர். இதில் திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் டாக்டர் ஜெக தீஷ் தலைமையிலான குழுவினர் பங்கேற்று வாலிபர்களிடம் 30 யூனிட் ரத்தம் சேகரித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன், ஒன்றியச் செயலா ளர் சி.மூர்த்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன் உள்ளிட்டோர் பங் கேற்று ரத்தம் வழங்கியோருக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.