tamilnadu

இஸ்லாமிய கூட்டமைப்பு தொடர் முழக்கப் போராட்டம்

திருப்பூர், பிப். 5 - குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. குடியுரிமைத்  திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகிய வற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலி யுறுத்தி திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் காங்கேயம் சாலை சிடிசி கார்னரில் தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. இச்சட்டத்தை மத்தியஅரசு திரும்பப் பெறும் வகையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும், மாநில அரசு இச்சட்டத்தை நிறை வேற்றக் கூடாது என்றும், இது குறித்து தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் சட்டமன்றத்தை முற்று கையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.