நாமக்கல், மார்ச் 15- நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம் பேருந்து நிறுத்தத்தில் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஞாயிறன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் முழக்க போராட்டம் நடை பெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய சட்டங்களை எதிர்த்தும், தமிழக அரசு அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்கக் கோரியும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் தொடர் முழக்க போராட் டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு வின் மாவட்ட செயலாளர் ஏ.அசன் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் பி.மாரிமுத்து விளக்கிப் பேசி னார். திவிக மாவட்ட துணைச் செய லாளர் ஏ.பொன்னுசாமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம். அசோகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் ஆர்.ரவி, திமுக, சிபிஐ, விசிக, தமு முக, திவிக, விதொச உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினர்.