அவிநாசி, ஜூன் 8- அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத அவலநிலை நீடிக்கிறது. அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து நீலகிரி, கோவை, ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி, திருப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகள் வந்து, செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு விதிக்கப் பட்டு பேருந்துகள் இயங்கக் கூடாது என அரசால் தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பச்சை நிற மண்டல மாக இருக்கும் இடங்களில் ஜூன் மாதத்தில் இருந்து பேருந்துகள், பனியன் கம்பெனி நிறுவனங்கள் போன்றவை சில கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படும் என அரசாங் கம் அறிவித்தது. இதையடுத்து, அரசுத்துறை சார்ந்த வேலைக்கு செல்லும் ஊழியர்கள், பனியன் தொழிலாளர் கள், கட்டிட தொழிலாளர்கள் போன்ற பல தரப்பினரும் பேருந்துகளில் பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், காலை நேரத்தில் சராசரியாக எட்டரை மணி அளவில் பனியன் கம்பெனி வேலை தொடங்கி விடும். நாங்கள் சொந்த ஊரி லிருந்து ஏழு மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு செல்வது வழக்கம். தற்போது பேருந்து புறப்படும் இடத்திலேயே போதிய பயணிகளை நிரப்பிக் கொண்டு வருவதால், வழியோர கிராமப் பகுதிகளில் பேருந்து நிறுத்தப் பட்டாலும் பயணிகள் ஏற்றப்படுவதில்லை. இதனால், மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம். எனவே, உட னடியாக தமிழக அரசு வழியோர கிராமப்பகுதி மக் களையும் ஏற்றி செல்ல புதிய வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறினார்.