திருப்பூர், செப். 18 – மனித நேயமும், மத நல்லி ணக்கமும்தான் காஷ்மீர் மக்க ளின் அடிப்படை குணமாக உள் ளது என்று கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் எனும் நூலை மொழி பெயர்த்த ஆசிரியர் செ.நடேசன் கூறினார். திருப்பூரில் முற்போக்கு வாச கர் வட்டத்தின் 64ஆவது அமர்வு புதன்கிழமை மாலை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடை பெற்றது. இந்த அமர்வுக்கு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார். இதில் கஷ்மீரி தேசி யத்தின் பல்வேறு முகங்கள் என்ற நூலை முன்வைத்து, அந்த நூலை மொழிபெயர்த்த ஆசிரியர் செ.நடேசன் பேசியபோது கூறிய தாவது: காஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களைப் புரிந்து கொள் வதற்கு இந்நூல் உதவும். இந்நூ லாசிரியர் நந்திதா ஹக்ஸா காஷ் மீரின் பண்டிட் சமூகத்தைச் சேர்ந் தவர், மனித உரிமை செயல்பாட் டாளர், கவித்துவமான முறையில் இந்நூலைப் படைத்திருக்கிறார். 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றபோது, காஷ்மீரி கள் தனி நாடாக இருந்தனர். அவர்கள் மதத்தால் இஸ்லா மியர்களாக இருந்தாலும், மத அடிப்படையில் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை. மதம் சார்ந்த செயல்பட விரும்ப வில்லை. மதசார்பற்ற இந்தி யாவுடன் இணையவே விரும்பி னர். மதச்சார்புள்ள பாகிஸ்தானில் மக்கள் வாழ்வில் விடுதலை, பொருளாதாரம், முன்னேற்றம் இல்லை என்பதை காஷ்மீரிகள் புரிந்து கொண்டனர். காஷ்மீரிகள் மனித நேயமும், மதநல்லிணக்கமும் கொண்ட வர்கள். ஒருவருக்கு காயம் ஏற் பட்டு ரத்தம் சிந்தினால், அந்த ரத்தத்தைப் பார்த்து மயங்கி விடுவார்கள், பறவைகள் காயம் பட்டால் அதைப் பார்த்து கண் ணீர் சிந்தக்கூடியவர்கள். அத்த கைய மென்மையான குணம் படைத்தவர்கள் எப்படி இன்று வன்முறைப் பாதைக்கு போகும் நிலை ஏற்பட்டது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்கள் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றக் கூடிய வர்கள். ஆனால் காஷ்மீர் இஸ்லா மியர்கள் தங்களை காஷ்மீரியத் என சொல்லிக் கொள்ளவே விரும்புவர். அவர்கள் இறை யாண்மை மதிக்கப்பட்டு, சுய நிர்ணய உரிமையைப் பெற்றால் அவர்கள் நல்ல வாழ்க்கை வாழக்கூடும். இவ்வாறு செ.நடே சன் கூறினார். இந்நூல் குறித்து கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் என்.கோபால கிருஷ்ணன், எழுத்தாளர் சுப்ரபார திமணியன், மகேந்திரன், நிசார் அகமது உள்ளிட்டோர் கருத்து கள் தெரிவித்தனர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கூறும்போது, சமீபத்தில் காஷ்மீர் எழுத்தாளர் ஒருவரை சந்தித்துப் பேசியதாக வும், காஷ்மீர் ஏற்கெனவே ஒரு பெரிய சிறைச் சாலையாக இருந் தது. தற்போது பெரிய சிறைச் சாலைக்குள் ஏராளமான சின்னச் சின்ன சிறைச் சாலைகளைப் போல் மாற்றப்பட்டுவிட்டது. அங்குள்ள தலைவர்கள் முதல் மக்கள் வரை அனைவரின் வாழ்வும் கட்டுப்படுத்தப்பட்டுள் ளது. அங்கு நடைபெறும் போராட் டங்கள், வேதனைகள் குறித்து ஊடகங்கள் எதுவும் தெரிவிப்ப தில்லை. ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயேவ்ஸ்கி கடைசி காலத் தில் நாடு கடத்தப்பட்டு சித்ரவதை அனுபவித்ததைப் போல் என் வாழ்வும் அமையப் போகிறது என்று அந்த எழுத்தாளர் கூறிய தாக சுப்ரபாரதி மணியன் பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து செ.நடே சனுக்கு மொழி பெயர்ப்பாளர்கள் வி.பா.கணேசன், அ.நிசார் அக மது, மிலிட்டரி பொன்னுசாமி மற்றும் பொன்னுலகம் குணா ஆகி யோர் நினைவுப் பரிசு வழங்கி னர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக முற் போக்கு வாசகர் வட்ட அமைப்பா ளர் பா.சௌந்தரபாண்டியன் நன்றி கூறினார்.