tamilnadu

காவல்துறையின் இந்துத்துவ ஆதரவு செயல்பாடு மாதர் சங்கம் கண்டனம்

அவிநாசி, செப். 4- அவிநாசி ஒன்றியத்தில் காவல் துறையின் செயல்பாடு பொதுநல இயக்கங்களுக்கு அனுமதி மறுத்து இந்துத்துவா சக்திகளுக்கு ஆதராவக உள்ளதாக மாதர் சங்கம் குற்றம் சாட் டியுள்ளது.  பெண்களைப் பற்றி இழிவாகப் பேசிய குருமூர்த்தியைக் கண்டித்து அவிநாசியில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதேபோல் வேதாரண் யத்தில் அம்பேத்கர் சிலை உடைக் கப்பட்டதைக் கண்டித்து கடந்த 27ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு முன் னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு  அனுப்பர்பாளையம் காவல் துறை யினர் அனுமதி மறுத்ததோடு, ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.   இந்த நிலையில், இந்து முன்னணி சார்பில் அவிநாசி ஒன்றியத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவிநாசி, செங்காடு போன்ற பகுதிக ளில் இந்து முன்னணியின் பொதுக் கூட்டம் மற்றும் விநாயகர் ஊர்வலத் திற்கு அவிநாசி காவல் துறை அனு மதி வழங்கியுள்ளது.  இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி தேவி கூறுகையில், மாதர் தம்மையை இழிவு செய்யும் மட மையை கொளுத்துவோம் என்று மகாகவி பாரதி கூறிய வரி நினைவுக்கு வருகிறது. பெண்களைப் பற்றி மிக வும் இழிவாகப் பேசிய ஆடிட்டர் குரு மூர்த்தியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அவிநாசி காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால் இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா  பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி வழங்கியிருப்பது, அவிநாசி காவல்துறை பொதுநல இயக்கங்க ளுக்கு அனுமதி மறுத்து இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வரும் காலங்களில் காவல் துறை இதுபோன்ற நடவடிக்கைகள் கைவிட வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் தொடர் போராட்டங் கள் நடைபெறும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி அவிநாசி  ஒன்றிய  செயலாளர் ஈஸ்வரமூர்த்தி கூறுகை யில், காவல்துறையின் செயல்பாடுகள்  இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும் மற்றும் கருத்துச் சுதந்தி ரத்தை நசுக்கும் வகையில் இருப்பதும் வெளிப்படையாக தெரிகிறது. எனவே எதிர்காலத்தில் காவல்துறை நேர்மை யான முறையில் செயல்பட வேண் டும் என்று தெரிவித்துள்ளார்.