புதுதில்லி, ஜூன் 16- ஊழியர்களாகத் தேர்வு செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் கரு வுற்றிருந்து அது ஆறு மாதங்க ளுக்கும் மேல் இருந்தால் அவர்க ளுக்கு நியமன ஆணை வழங்கக் கூடாது என்று இந்தியன் வங்கி முடிவு செய்திருப்பதற்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே வெளியிட்டுள்ள அறிக்கை யில் அவர்கள் மேலும் கூறியிருப்ப தாவது: இதுபோன்று ஒரு முடிவை ஒரு சில மாதங்களுக்கு முன் பாரத ஸ்டேட் வங்கி எடுத்தது. பல்வேறு தரப்பினரிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அது அந்த முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இப்போது இந்தியன் வங்கி இவ்வாறு பெண்க ளுக்கு எதிராக இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது. இந்தியன் வங்கி சமீபத்தில் அனுப்பியுள்ள வழிகாட்டும் நெறி முறைகளில் ஒரு புதிய நிபந்தனை யை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி, “வேலைக்குத் தெரிவு செய்யப்பட்ட பெண் ஊழியர், 12 வாரங்கள் அல்லது அதற்கும் மேலாகக் கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில், அவர் பிரசவம் முடியும் வரை வேலைக்குத் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட வேண்டும்,” என்றும் “பிரசவம் ஆனபிறகு ஆறு வாரங்கள் கழித்து அவர் மறுபடியும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப் பட்டு, ஒரு பதவி செய்யப்பட்ட மருத்துவரிடமிருந்து உடற்தகுதிச் சான்றிதழ் (fitness certificate) பெற்று சமர்ப்பித்திட வேண்டும்” என்றும் கூறியிருக்கிறது. இதே போன்ற வழிகாட்டும் நெறிமுறை களை தமிழ்நாடு கிராம வங்கியும் அனுப்பியிருக்கிறது. அதனுடைய அறிக்கையில் பிரசவம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து அவர் களை வேலையில் சேர்த்துக் கொள்ள அனுமதித்திட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்தப் பிற் போக்கு விதிமுறை பெண்களுக்கு மிகவும் பாரபட்சமான ஒன்று. நாடு சுதந்திரம் பெற்றபின்னர் பெண்கள் வேலையில் இருப்பது என்பது தற்போது மிக மிகக் குறைவு. வங்கி நிர்வாகங்கள் இத்தகு அறிவுரைகளை வழங்குவது பெண்க ளுக்கான வேலை வாய்ப்புகளில் மேலும் கடுமையான முறையில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்சமயம் வங்கிகளில் வேலைபார்க்கும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 25 விழுக்காடேயாகும். இந்தச் சுற்றறிக்கை 2017ஆம் ஆண்டு மகப்பேறு பயன்கள் (திருத்தச்) சட்டத்தின் ஷரத்துக்களுக்கு எதி ரானதாகும். 50 அல்லது அதற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் உள்ள அனைத்துத் துறைகளின் கீழும் ஒவ்வொரு நிறுவனத்திலும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் (crèche-day care facilities) அமைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்க ளாக உள்ள பெண் ஊழியர்கள் நாளொன்றுக்கு நான்கு முறை வரையிலும் இத்தகு குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களுக்குச் சென்றுவர அனுமதித்திட வேண்டும் என்பதும் இதில் அடங்கி இருக்கிறது. இத்தகு நிலையில் பெண்கள் கருவுற்றிருப்பின் அவர்க ளை வேலைக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம் என வங்கிகள் கூறுவது வங்கிகள் வேலை உரிமையை மீறும் செயலாகும். இதேபோன்று முன்பொரு தடவை வேலைக்குச் சேரும் பெண் ஊழியர்களிடம் “பெண் ஊழியர்க ளுக்கு மட்டும்” என்று குறிப்பிட்டு அவர்களின் தாய்மை குறித்த தகவல் கோரப்பட்டிருந்தது. பெண்களை அவமானப்படுத்தும் இந்தப்பிரிவு கடும் எதிர்ப்புகளுக்குப் பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. மீண்டும் இதுபோன்ற பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை ஏற்க முடியாது. இந்தியன் வங்கி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள, பெண் ஊழி யர்களுக்கு எதிரான இந்த முடிவு உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரு கிறது. மேலும் அரசமைப்புச்சட்டத் திற்கு எதிராக இத்தகைய பிற்போக் குத்தனமான சுற்றறிக்கையை வெளியிடுவதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது. வேலைக்கு ஆளெடுப்பதில் எந்தவொரு நிறுவ னமும் பெண்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டக்கூடாது என்பதை ஒன்றிய அரசு உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரு கிறது. இவ்வாறு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)