tamilnadu

மாற்றுத்திறனாளிகள் பயண அட்டை காலம் நீட்டிப்பு - திருப்பூர் ஆட்சியர் தகவல்

திருப்பூர், ஜூன் 19 - மாற்றுத்திறனாளிகளுக்கான பயணஅட்டை காலம் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள் ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த் திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்ப தாவது, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக ஏற்கனவே, 2019-2020 ஆண்டிற்கு மாற்றுத்திறனா ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசப் பயண அட் டையினை ஆகஸ்ட் 31, 2020 வரை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், புதிய இலவச பயண அட்டை யினை கோரும் மாற்றுத்திறனாளிகள் ஆகஸ்ட் 31 2020க்குப் பின்னர் விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.