அவிநாசி, ஜூன் 3 - சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் திங்கள் தோறும் நிலக்கடலை ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுளளது. இதனால் மார்ச் 16 தேதிக்கு பிறகு நிலக் கடலை ஏலம் நடைபெறவில்லை. இதையடுத்து தற்போது ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதால் 10 வாரங்களுக்கு பிறகு சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக் கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 110 மூட் டைகள் வந்திருந்தது. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,080 முதல் ரூ.6,200 வரையிலும், இரண் டாவது ரக நிலக்கடலை ரூ.5,700 முதல் ரூ.5,850 வரையி லும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5,100 முதல் ரூ.5,250 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்திற்கு ஏலம் போனது.