tamilnadu

சேவூரில் நிலக்கடலை ஏலம் ஒத்திவைப்பு

அவிநாசி, மார்ச் 24- சேவூரில் நிலக்கடலை ஏலம் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவிநாசி ஒன்றியம், சேவூர் ஒழுங்கு முறை விற்ப னைக்கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடை பெறும் நிலக்கடலை ஏலத்தில் உள்ளுர் விவசாயி கள் மட்டுமின்றி மதுரை, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, திண்டுக்கல், தாராபுரம், திருப்பூர், அன் னூர், அவிநாசி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து கலந்து கொள்வர். இந்நிலை யில் வழக்கம் போல் பல விவசாயிகள் சுமார் 2 ஆயி ரம் மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனர். ஆனால் இவற்றை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஏலம் ரத்து செய்யப்ப டுவதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் அறிவித்தார்.  மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரண மாக வாரந்தோறும் நடைபெறும் நிலக்கடலை ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.