tamilnadu

ரூ.5 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, ஜூன் 3-சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்களன்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்திற்கு 200 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,100 முதல் ரூ 6,400 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5,900 முதல் ரூ.6,000 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ 5,400 முதல் ரூ 5,800 வரையிலும் ஏலம்போனது. மொத்தம் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.