tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி - வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு நல திட்டங்கள் அறிவிப்பு பலகை

உடுமலை, ஜூன் 18- உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், கடந்த 13ஆம்  தேதி முதல் 27ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் நடை பெற்று வருகிறது.  இந்த வருவாய் தீர்வாய கூட்டத்திற்கு வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அரசு நல திட்டங்கள் குறித்து எந்த விபரங்களும் செய்யவில்லை என்று கடந்த 15ந் தேதி தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளி யிட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக 18ந் தேதி குறிச்சிக் கோட்டை பிர்க்கா கிராமங்களுக்கு வருவாய் தீர்ப்பாயம் நடைபெற்றது. அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் முன் நடைபெறும் வருவாய் தீர்வாயத்தில் மக்கள் பயன்  பெறும் திட்டங்கள் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப் பட்டு இருந்தது.