tamilnadu

img

சாலைகளை மீண்டும் ஆக்கிரமிக்கும் பிளக்ஸ் பேனர்கள்

அவிநாசி, ஜூலை 12- திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பல்வேறு பிரதான சாலைகளில் இடையூறாக பிளக்ஸ் பேனர், விளம்பர பதா கைகளை வைப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளக்ஸ் பேனரால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம்,  தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி கட்டுப்பாடு விதித்தது.

இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அகற்றியும், பிளக்ஸ் பேனர் மீண்டும் வைக்கப்பட்டால் கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரையுள்ள சாலைகளை ஆக்கிரமித்து  மீண்டும் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைப் பது அதிகரிக்க துவங்கியுள்ளது. ஆகவே, இதனை உடனடி யாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.