அவிநாசி ஜூன் 21- விசைத்தறி தொழிலாளர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வலியுறுத்தி ஞாயி றன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விசைத்தறி தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும், நீண்டகால வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்கள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும். தொழி லாளர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர் களுக்கு கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும். மின்சார சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். விசைத்தறி கூடங்க ளுக்கு இலவசமாக ஆயிரம் யூனிட் மின் சாரம் வழங்க வேண்டும்.
60 வயது பூர்த்தியான விசைத்தறி தொழி லாளர்கள் அனைவருக்கும் ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும். விசைத் தறி தொழிலாளர்களுக்கு இலவசமாக அரசே வீடு கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும். விசைத்தறி தொழிலாளர் கள் அனைவருக்கும் வேலையில்லா காலங்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் அறைகூவல் விடுத்தது. அதன் ஒரு பகுதியாக அவிநாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசைத் தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி, மாவட்ட நிர்வா கிகள் முருகன், குட்டி (எ) மோகன சுந்தரம், பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
சேலம்
சேலம் மாவட்டம், செக்குமேடு மற்றும் இடங்கணச்சாலை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு விசைத்தறி சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செய லாளர் பி.சந்திரன், மாவட்ட உதவி செய லாளர் பி.செல்வம், மாவட்டக்குழு உறுப் பினர்கள் சு.மாதேஷ், சு.சண்முகம், ஊ.பச்சமுத்து உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.