திருப்பூர், மார்ச் 4- திருப்பூர் மாநகரில் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் சிகிச் சைக்கு வந்து செல்லும் இஎஸ்ஐ மருந்துவமனை அருகே வாரக்க ணக்கில் அள்ளப்படாமல் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசி வருவது டன் நோய் பரப்புவதாகவும் உள் ளது. பின்னலாடை தொழில் நகர மான திருப்பூரில் பல லட்சம் தொழி லாளர்கள் வேலை செய்து வருகின் றனர். இஎஸ்ஐ காப்பீட்டுத் திட்டத் தில் மட்டும் ஒரு லட்சம் தொழிலா ளர்கள் பதிவு செய்துள்ளனர். திருப் பூர் ஓடக்காடு மற்றும் திருநீலகண் டபுரம் ஆகிய இரு பகுதிகளில் இஎஸ்ஐ மருந்தக மருத்துவமனை கள் செயல்பட்டு வருகின்றன. இதில், கொங்கு பிரதான சாலை, திருநீலகண்டபுரம் பகுதி யில் உள்ள இஎஸ்ஐ மருந்தக மருத் துவமனை கிழக்குப் பகுதியில் தொழிலாளர்கள் அடர்த்தி மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. தின மும் ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்தார் இங்கு மருத்துவ பரி சோதனை, சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையின் வடக்குப் பகுதியில் சுற்றுச் சுவருக் குப் பின்புறம் வாரக்கணக்கில் அள்ளப்படாமல் குப்பை மலை போல் தேங்கி இருக்கிறது. இந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள், பூச்சிகள் மொய்த்து வருகின்றன. மருத்துவ மனை வளாகத்திற்கு பக்கத்தி லேயே இந்த சுகாதார சீர்கேடான நிலை இருப்பது இங்கு வரக்கூடிய தொழிலாளர்களையும், சுற்று வட்டாரப் பொது மக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் சார் பில் மருத்துவமனை சுற்றுச்சு வரில் தூய்மை பாரதத் திட்ட விழப்புணர்வு வாசகமும் நீளமாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதே இடத்தில் குப்பையை அள்ளாமல் மாநகராட்சி நிர்வாகமே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திக் கொண்டி ருப்பது ஊருக்குத்தான் உப தேசமா? என்று கோபமாக கேட் கின்றனர் அப்பகுதி மக்கள். பல்வேறு தொற்று நோய்கள் பரவக்கூடியதாகவும், மருத்துவ மனைக்கு வரக்கூடிய நோயாளிக ளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கக்கூடிய இது போன்ற பிரச்சனைகளில் உடனடி கவனம் செலுத்துவதற் கும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை திறனுடன் அமல்ப டுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் சீர்மிகு நகரத் திட்டம் என, இங்கே இருக்கும் பாரம்பரிய, பழமையான கட்டுமா னங்களை இடித்து புதிய கட்டடங் களைக் கட்டி வணிகநோக்கில் வருமானம் பார்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது மாநகராட்சி நிர்வாகம். மக்களின் சுகாதாரத் தைக் கேள்விக் குறியாக்கிவிட்டு சீர்மிகு நகரத்தை உருவாக்கு வோம் என்பது கேலிக்கூத்தானது. இது சீர்கேடான நகரமாகவே இருக்கும் என்று தொழிலாளர்கள் குமுறலை கொட்டித் தீர்க்கின்ற னர்.