உடுமலை, ஜன. 5- ஒவ்வொரு வருடமும் சைனிக் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புகளில் சேர நுழைவு தேர்வு நடத் தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2020-21 ஆம் ஆண்டில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு சென்னை பிரசி டென்சி மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் ஏர்போர்ஸ் பள்ளி, தஞ்சாவூர், கோவை, ஏர்போர்ஸ் பள்ளிகள், உடுமலை லூர்துமாதா மேல்நிலைப்பள்ளி, அமரா வதி சைனிக் பள்ளி புதுச்சேரி வள்ளலார் மேல் நிலைப்பள்ளியில் ஞாயிறன்று நுழைவு தேர்வு நடை பெற்றது. இதில் 1662 பேர் 6ஆம் வகுப்பிற்கும், 799 பேர் 9ஆம் வகுப்பிற்கும் என மொத்தம் 2461 மாணவர்கள் தேர்வு எழுதினர். முன்னதாக, அமராவதி நகர் சைனிக் பள்ளியில் நடைபெற்ற நுழைவு தேர்விற்கான ஏற்பாட்டினை பள்ளியின் முதல்வர் எச்.எஸ்.சிதானா, நிர்வாக அதிகாரி அமித்குர்குரே மற்றும் துணை முதல்வர் ஆகியோர் செய்திருந்தனர்.