tamilnadu

img

புளியங்கொம்பைப் பிடிக்கலாமே..?

ஐஐடி நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஆகியவை மாணவர்களின் விருப்பத்துக்கு மாறாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசியல் மாற்றங்கள் இந்தத் தேர்வுகளை மாற்றி அமைக்கும். ஆனால் தற்போது பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வுகளுக்கு இப்போதிருந்தே தயாராகி விடுவது அவசியமாகும். சில மாணவர்கள் பள்ளிப் பாடங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் தராமல் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்கள். மேலும் சிலரோ, பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்துவிட்டு, கல்லூரிக்குச் செல்லாமல் நீட் தேர்வுக்காக முழுநேரமும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஐஐடி மற்றும் மருத்துவப் படிப்பு என்பது பல மாணவர்களுக்குப் பெரும் கனவாகும். பிடிச்சாலும் புளியம்கொம்பைப் பிடித்தது மாதிரியான உணர்வை இந்தப் படிப்புகள் ஏற்படுத்தும். பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் இதை நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம். 

ஐஐடி

மத்தியப் பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப் போகிறார்கள். பாடத்திட்டத்தை உறுதிப்படுத்திக் கொண்டு என்.சி.இ.ஆர்.டி(சூஊநுசுகூ) புத்தகங்களைப் படிக்க வேண்டும். திட்டமிடல் அவசியம். எப்படிப்பட்ட கேள்விகள் கேட்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய கேள்வித்தாள்கள் இதற்குப் பெரும் அளவில் உதவும். பயிற்சி வகுப்புகள் நிச்சயமாக உதவி செய்யும். புதிய உத்திகளை அறிந்து கொள்ள பயிற்சி வகுப்புகள் நிச்சயமாக உதவும்.ஐஐடி முடித்தவர்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமரும்போது ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் முதல் 9 லட்ச ரூபாய் வரையில் கிடைக்க வாய்ப்புள்ளது. 

நீட்

கடந்த சில ஆண்டுகளாக மட்டும் தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. பல கசப்பான சம்பவங்கள் நடந்தாலும் விடாப்படியாக இந்தத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்விலும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்திலிருந்துதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. மாநிலங்களில் உள்ள பாடத்திட்டங்களிலிருந்து சில கேள்விகள் மட்டும் கேட்கப்படுகின்றன. தமிழில் எழுதலாம் என்றாலும் தமிழகப் பாடத்திலிருந்து அதிகம் கேள்விகள் இல்லை.இருப்பினும், நீட் எழுதினால்தான் மருத்துவப்படிப்பு என்பதை எதிர்கொள்ள விரும்பும் மாணவர்கள் தனியாகத் தயாரிப்பையும் மேற்கொள்ள வேண்டும். பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நீட் தேர்வு என்பது போட்டித் தேர்வு போன்றது என்பதால், பயிற்சித் தேர்வுகளையும் மாணவர்கள் எழுதி, எழுதிப் பார்க்க வேண்டும்.