அவிநாசி ஜூன்15- அவிநாசியில் உள்ள தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பதைத் தடுக்க ஒரு குழு அமைத்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றி னால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 4 மண்டல மாக பிரிக்கப்பட்டு சில தளர்வுகளை ஏற்படுத்தி கட்டு பாடுகள் விதிக்கப்பட்டு கடைகள், பொதுப் போக்கு வரத்துகள் இயங்கி வருகின்றது. ஆனால், பள்ளிகள், கல்லூரிகள் இயங்க தமிழக அரசு தொடர்ந்து தடை அறிவித்து வருகிறது.
மேலும், சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில், இதை பயன்படுத்தி கொண்டு சில தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது. பல் வேறு இடங்களில் மாணவர்களுக்கான நுழைவு தேர்வுகளும் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள தனி யார் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர் களின் பெற்றோர்களை அழைத்து பதினொன்றாம் வகுப்புக்கு உண்டான கட்டணத்தையும், மாணவர் சேர்க்கையும் நடத்தி வருகின்றன. இதற்கு பெற் றோர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற னர். மேலும், அரசாங்கம் அறிவித்த பின்பு கட்ட ணத்தை செலுத்துகிறோம் என குறிப்பிட்டதோடு, இது போன்ற நடவடிக்கையை தடுக்க அரசு ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.