tamilnadu

img

குடிநீர், கழிவுநீர் பிரச்சனை: நல்லூர் மண்டல அலுவலகம் முற்றுகை

திருப்பூர், ஜூலை 3- திருப்பூர் மாநகராட்சி 34ஆவது வார் டுக்கு உட்பட்ட பச்சையப்பா நகர் குடியி ருப்பில் நீண்ட காலமாக சாக்கடை தூர்வா ரப்படாமலும், முறையாக குடிநீர் வழங்கா மலும் இருப்பதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி மூன்றாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பச்சையப்பா நகர் குடியிருப்பில் இரு வீதிகளில் 85 வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 350 பேர் வசித்து வருகின்றனர். கடந்த 20 வருடங்களாக இங்கிருக்கும் சாக்கடை கள் பழுதடைந்து மிக மோசமான நிலை யில் உள்ளன. இதனால், கழிவுநீர் வெளி யேற வழியின்றி துர்நாற்றம் வீசுவதுடன், புழுக்கள் உற்பத்தி ஆகி நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து சுகா தாரத்துறை ஆய்வாளரிடம் அப்பகுதி மக் கள் புகார் அளித்ததின் பேரில் மாநகராட்சி சார்பில் ஐவர் பணிக்கு வந்துள்ளனர். ஆனால், முழுமையாகத் தூர் வாராமல் அரைகுறையாக விட்டுவிட்டு வேலையை சரிவர முடிக்காமல், கிடப்பில் போட்டுச் சென்றனர். இது தவிர இங்குள்ள மூன்று ஆழ் குழாய் கிணறுகளில் இருந்து பொது உப யோகத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டாலும், வீட்டுக்கு இரு குடம் மட்டுமே கிடைக்கும். ஒரு குழாயில் மின் மோட்டார் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது.

எனவே, இப்பகுதி குடிநீர் பிரச்ச னைக்கும் முறையான தீர்வு காண வேண் டும் என்று பச்சையப்பா நகர் பொது மக்கள் வற்புறுத்தினர்.  இதையடுத்து வெள்ளியன்று மார்க் சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், பி.செல்வ ராஜ், சுந்தரம் மற்றும் அப்பகுதி பொது மக்கள் உட்பட பலர் நல்லூரில் உள்ள மூன் றாவது மண்டல அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். மண்டல உதவி ஆணையர், பொறியாளர் உள்ளிட்டோர் இல்லாத நிலையில் அலுவலக பணியாளர்களிடம் கோரிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர். மேலும், அதிகாரிகள் அங்கு வரும்வரை போராட்டத்தில் ஈடுபட்டோர் காத்திருப்பதாகத் தெரிவித்து அந்த வளா கத்தில் அமர்ந்திருந்தனர். இதனையடுத்து இப்பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய நிலையில் அதிகாரி கள் தண்ணீர் மற்றும் சாக்கடைப் பிரச்ச னைக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதி யளித்தனர்.